இருசக்கர வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய பிரீமியம் ஷோரூமை திருச்செங்கோட்டில் ஸ்ரீஅம்மன் சுசூகி என்ற பெயரில் திறந்துள்ளது.
விழாவில், சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெனிச்சி உமேடா பேசியதாவது: புதிய டீலர்ஷிப், எங்களின் பல்வேறு வகையான ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் விற்பனை செய்ய உள்ளது. வாடிக் கையாளர்களுக்கு சிறந்ததொரு அனுபவத்தையும் வழங்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எங்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புதிய டீலர்ஷிப்கள் திறப்பதே அதற்கு சான்றாக உள்ளது.
புதிய பிரீமியம் டீலர்ஷிப்கள் வண்டிகள் மீதான ஆர்வத்தை வாடிக்கையாளர்களிடையே தூண்டுவதோடு அவர்களின் வாங்கும் அனுபவத்தையும் மேம்படுத்தும்.
இங்கு எங்களின் புதிய தயாரிப்புகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு வண்டிகளுக்கு தேவையான உதிரி பாகங்களும் உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய வண்டிகளை தேர்வு செய்வதோடு, வண்டியை மேலும் அழகுபடுத்த தேவையான உதிரி பாகங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.
தற்போது இந்நிறுவனத்திற்கு 517 பிரீமியம் டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. இதில் இந்தியா முழுவதும் டெல்லி, சூரத், அகமதாபாத், பெங்களூர், கொச்சி, புனே, தானே, மும்பை ஆகிய இடங்களில் உள்ள 8 பைக் மண்டலங்களும் அடங்கும்.