லைப்ரே பவுண்டேஷன் சார்பில் ஏழை மாணவர்களின் கல்விக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவையை மையமாக வைத்து லைப்ரே என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்கு தேவையான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நவஇந்தியா பகுதியில் உள்ள லைப்ரே அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் லைப்ரே அமைப்பின் இயக்குனர் பாபி பாலச் சந்திரன், ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ஸ்வாதி ஆகியோர் கலந்து கொண்டு 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் லைப்ரே அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், நிதி உதவி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.