ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் அனைத்து ரகங்களிலும் ஆறு ஏர்பேக்குகளை அறிமுகப்படுத்தி பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்ட, உலகிற்கு தயாராக உள்ள இந்தியா 2.0 பொருள் போர்ட் போலியோ அறிமுகம், நிறுவனத்தின் எம்ஒய்24 அப்டேட்களின் ஒரு பகுதியாகும். ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், தற்போது குஷாக் மற்றும் ஸ்லாவியா வாகனங்களுக்கு ஆறு ஏர் பேக்குளை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆக்டிவ் வேரியண்டில் தொடங்கி ஆம்பிஷன் வரையும், மாண்டோ கார்லோ ஸ்டைல் வேரியண்ட்களை மற்றும் எஸ்யூவி வேரியண்ட் கலவையான உயர் ரக எலெகென்ஸ் எடிஷனையும் குஷாக் கொண்டுள்ளது.
குஷாக் போலவே, ஆக்டிவில் தொடங்கி, ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் வரை முன்னேறி, வாடிக்கை யாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் உயர் ரகத்தில் ஸ்டைல் எடிஷன் மற்றும் எலெகென்ஸ் எடிஷனை ஸ்லாவியா கொண்டுள்ளது.