fbpx
Homeபிற செய்திகள்இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் கோவையில் பேரின்ப பெருவிழா

இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் கோவையில் பேரின்ப பெருவிழா

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா 2024 நிகழ்ச்சி கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் பள்ளி மைதானத்தில் துவங்கியது. கடந்த 1- ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி வருகிற ஐந்தாம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது

முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு செய்தியாளர் சுவிசேஷகர் டி.ஸ்டீபன் இறைச்செய்தி வழங்கினார். அதைத் தொடர்ந்து இயேசுவின் அன்பின் ஊழிய ஸ்தாபகர் டாக்டர் அப்போஸ்தலர் ஏ.ஜவகர் சாமுவேல் நற்செய்தி அளித்தார். டாக்டர் டேனியல் ஜவகர் மற்றும் போதகர் பென்னி விசுவாசம் ஆகியோர் ஆராதனை நடத்தினார்கள்.

கூட்ட ஏற்பாடுகளை பேராயர் பெக்சல் ஜேக்கப் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கூட்டத்தில் திரளான மக்கள் வந்து இறைச் செய்தி கேட்டு ஆசிர்வாதம் பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போதகர் ஜான்சன் சத்தியநாதன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் போதகர்கள் ஏ.கிறிஸ் டோபர், நெல்சன் ஜார்ஜ், எஸ் .சாலமோன் பிரேம் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

தொடர்ச்சியாக வரும் நாட்களில் போதகர் ஆல்வின் தாமஸ், போதகர் குரூஸ் திவாகரன், போதகர் டேவிட் பிரகாசம், போதகர் ஜான் ஜெபராஜ், போதகர் ஜோயல் தாமஸ் ராஜ், போதகர் பென் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு இறைச் செய்தி வழங்குகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img