யூகோ வங்கி 31.3.24 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
நிதியாண்டு 2024 மற்றும் நிதியாண்டு 2023 ஆகியவற்றை ஒப்பிடுகையில் யூகோ வங்கியின் வணிகம் (ரூ.4,35,456 கோடியில் இருந்து) ரூ.4,50,007 கோடியாக 9.50 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அதாவது முன்பணம் ரூ.1,79,195 கோடியில் இருந்து 15.62 சதவீதமும் மொத்த வைப்புத்தொகைகள் ரூ.2,56,261 கோடியில் இருந்து 5.53 சதவீதம் அதிகரித்து ரூ.2,63,130 கோடியாகவும் உள்ளது.
சில்லறை, வேளாண்மை மற்றும் சிறுகுறு, நடுத்தரத் தொழில் துறையில் வங்கி சென்ற ஆண்டின் ரூ.93,720 கோடியில் இருந்து 13.88 சதவீத வளர்ச்சியுடன் ரூ.97,516 கோடியாகவும் சில்லறை முன்பண விநியோகத்தில் 14.62 சதவீதம் மற்றும் வேளாண்மைக்கான முன் பணம் விநியோகத்தில் 13.16 சதவீதம் மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில்துறை முன்பண வழங்கலில் 13.53 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
சொத்தின் தர அபிவிருத்திக் குறியீட்டில் வராக்கடன் முந்தைய ஆண்டின் 39 புள்ளிகள் குறைந்து 3.85 ல் இருந்து 3.46 சதவீதமாகவும் இதர வராக்கடன் 40 புள்ளிகள் குறைந்து 31.3.2024 அன்று 0.89 சதவீதமாக உள்ளது.
மூலதன ஸ்திரத்தன்மை விகிதம் 47 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 31.3.2024 அன்று 16.98 சதவீதமாகவும் முதல் அடுக்கு மூலதன விகிதம் 58 அடிப்படைப் புள்ளிகள் அதிலிருந்து 31.3.2024 அன்று 14.54 சதவீதமாகவும் உள்ளது.
31.3.2024 உடன் முடிவடைந்த 12 மாதங்களில் இயக்குதல் லாபமாக 5.43 சதவீதம் அதிகரித்து 4576 கோடியானது. வைப்புத்தொகைக்கு எதிரான கடன் விகிதம் 620 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 71.02 சதவீதம் ஆனது. 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் முகமதிப்பில் 2.8 சதவீதம் அதாவது பங்கு ஒன்றுக்கு 28 பைசா லாபம் ஈட்டி உள்ளது.
மேற்குறிப்பிட்டவை தவிர, நிகர வட்டிவருமானம் 31.3.2024 முடியவுள்ள 12 மாதங்களுக்கு ரூ.7,343 கோடியில் இருந்து 10.32 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.8,101 கோடியாக அதிகரித்துள்ளது.