fbpx
Homeதலையங்கம்ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து!

ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து!

காட்டில் தாயை பிரிந்து வரும் குட்டி யானைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோர் காயமடைந்த யானைகளின் உயிரை காப்பாற்றுவது தொடர்பாக இந்த தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் கதைக் களம் அமைந்துள்ளது.

தாயை பிரிந்த 2 குட்டி யானைகளையும் பராமரிக்கும் பணியில் பொம்மன், பெள்ளி தம்பதியினர் ஈடுபடுத்தப்பட்டனர். மிக அன்பாக குட்டி யானைகளை பராமரிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அந்த குட்டி யானைகளின் தாய் தந்தையாகவே பொம்மன், பெள்ளி தம்பதியினர் மாறி விட்டனர்.

“தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” எனும் இந்தப் படம் ஆஸ்கர் விருதினை வென்றதன் மூலம் உலகம் முழுக்க அந்த படம் கவனம் ஈர்த்து வருகிறது.
இதே போல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கொடுரி மரகதமணி கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ், அதேபோல ஆஸ்கர் விருதை தட்டித்தூக்கிய பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்தின் இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த விருதுகள் சாதாரணமாக கிடைத்து விடவில்லை. ஏராளமான கலைஞர்களின் கடுமையான உழைப்புக்குக் கிடைத்த நற்சான்றாகத் தான் இதனை கவுரவிக்க வேண்டும்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கர் விருதுகளை மீண்டும் வென்று தந்ததன் மூலம் இந்தியாவை பெருமிதம் கொள்ளச் செய்யும் அரிய சாதனையை நிகழ்த்திய அத்தனை கலைஞர்களையும் நாடே போற்றிக் கொண்டிருக்கிறது; வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

அவர்களின் வாழ்த்துகளோடு நமது வாழ்த்தையும் இணைப்போம்!

படிக்க வேண்டும்

spot_img