இன்று நாடு முழுவதும் 80வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடியேற்றி காவல் துறையினர் மற்றும் என்.சி.சி மாணவர்களின் அணி வகுப்பை ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களையும் சமாதான புறாக்களையும் பறக்கவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி யில் 16 பயனாளிகளுக்கு 97 லட்சத்து 55 ஆயி ரத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கி னார். மேலும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து பழங்குடியின மக்களான கோத்தர், தோடர் இன மக்கள் அவர்களின் கலாச்சார உடை அணிந்து நடனம் ஆடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.



