fbpx
Homeபிற செய்திகள்தனியார் பேருந்து ஓட்டுநர்களிடம் மேட்டுப்பாளையம் போலீசார் சோதனை

தனியார் பேருந்து ஓட்டுநர்களிடம் மேட்டுப்பாளையம் போலீசார் சோதனை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஒவ்வொரு ஐந்து நிமிடங்களும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 40 கிலோமீட்டர் தொலைவு கொண்ட நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

பெரும்பாலான விபத்துக்கள் அவ்வழியே செல்லும் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகள் எவ்வித நேர கட்டுப்பாடும் இன்றி அசுர வேகத்தில் இயக்கப்படுவதே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்துகள் அனைத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஓட்டுநர்களிடம் தகுந்த ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதையும் ஓட்டுனர்கள் யாரும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுகிறார்களா என்றும் ஆய்வு செய்தனர்.
மேலும் வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img