fbpx
Homeபிற செய்திகள்கோவை நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கோவை நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப் பாளர் அன்புச் செழியன் தலைமை தாங்கினார்.

தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர்கள் மூத்த வழக்கறிஞர்கள் பி.ஆர்.அருள்மொழி, கே. எம். தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருது பாண்டியன், அரசு வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, நீதிமன்ற துணை அமைப்பாளர் ராஜ மாணிக்கம், மயில்வாகனன், கனகராஜ், ஆசை தம்பி, எலிசபெத் ராணி, மதிவாணன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img