fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய பேட்டரி வாகனம் அறிமுகம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய பேட்டரி வாகனம் அறிமுகம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மற்றும் பணி நிமித்தமாக வருகை தருகின்றனர்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் அலுவலக நுழைவு வாயிலிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 300 மீட்டர் தூரம் நடந்து வருவதில் சிரமங்களை எதிர் கொண்டனர்.

இந்த நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சதீஸ் பொது மக்களின் வசதிக்காக ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வாகனம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டது.

இவ்வாகனம் ஒரு முறைக்கு 4 நபர்கள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 21.02.2026 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்கள்.

மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இந்த புதிய பேட்டரி வாகனத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img