கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மாதாந்திர உதவித்தொகைத் திட்ட அறிமுகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கேபிஆர் குழுமத்தின் செயல் இயக்குநர் சி.ஆர். ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விரு ந்தினராக பங்கேற்ற இந்திய கப்பல் படை அதிகாரி கமோடர் பாலசுந்தரம் தேசியக்கொடியை ஏற்றி “நாம் 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு நாடாக மாறும் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்.
இளைய தலைமு றையினர் தங்களுக்கு கிடைக்கும் ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்பு, ஆதரவு மற்றும் வச திகளை நேர்த்தியாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்“ என்று பேசினார். மேலும், சிறந்த தொலை நோக்கு பார்வையுடனும் நமது தேசத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
இதை தொடர்ந்து முப்படையைச் சேர்ந்த தேசிய மாணவர் படையின் அணி வகுப்பு, மாணவர்களின் சிலம் பாட்டம், மற்றும் ட்ரோன் சாகசம் போன்றவை நடைபெற்றது. 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் கேபிஆர் ப்ரைடு ஃபெல்லோஷிப் என்ற மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை கேபிஆர் குழுமத்தின் செயல் இயக்குநர் அறிமுகப்படுத்தி, “கேபிஆர் கல்லூரி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 100 லட்சம் நிதியில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் 100 ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது” என்று பேசினார்.
பின்னர் பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் த சரவணன் அவர்கள் “இந்த சுதந்திர தினத்தில் அனைத்துத் துறைகளிலும் நம் நாடு மேம்படும் வகையில் ஒவ்வொருவரும் ஒரு யோசனையைப் பங்களித்து வலிமையான இந்தியாவை உரு வாக்குவோம்” என்றார்.
மேலும் சென்ற கல்வி யாண்டில் பல்வேறு பிரிவு களில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் மற்றும் பேராசியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தி னர்களாக பங்கேற்ற ஜப்பானின் இண்டோபாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் மரிக்கோ ஹனஓகா மற்றும் ஸ்சாஃப் ஸ்பெஷாலிட்டி வால்வ்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் பாட்டு இயக்குனர் அப்துல் கோமஸ் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.