ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மேல்நிலைப்பள்ளியின் 20வது பள்ளி ஆண்டு விழாவுக்கு தலைமை விருந்தினராக சங்ககிரி கோட்டாட்சியர் மற்றும் பள்ளி முன்னாள் மாணவி லோகநாயகி புதன்கிழமை கலந்துகொண்டார்.
அவர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி தாளாளர் ஆர்.எம்.தேவராஜா, அறங்காவலர்கள் ஏ.வெங்கடாசலம், ஏ.கே.இளங்கோ, பி.சச்சதானந்தம், பி.டி.தங்கவேல், டாக்டர் கே.செங்கோட்டுவேலன், கே.கார்த்திகேயன், முதல்வர் கே.மைதிலி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்களை அறக்கட்டளை தலைவர் டாக்டர்.ஆர்.குமாரசாமி, செயலர் பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வி.ரவிசங்கர் பாராட்டினர்