Homeபிற செய்திகள்கேபிஆர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு வடிவமைப்பு பயிற்சி

கேபிஆர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு வடிவமைப்பு பயிற்சி

பொறியியல் கல்வியில் வடிவமைப்பு சிந்தனையை ஒருங்கிணைக்கும் முயற்சியில், கோயம்புத்தூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 28 பேராசிரியர்கள், சென்னையிலுள்ள ஸ்கூல் ஆஃப் டிசைன் திங்கிங்கில் மூன்று நாள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பயிற்சி கேபிஆர் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்கூல் ஆஃப் டிசைன் திங்கிங் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது கல்லூரியைச் சேர்ந்த அனைவரின் வடிவமைப்பு சிந்தனைத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொறியியல் மாணவர்களிடம் வடிவமைப்பு சிந்தனையை வளர்ப்பதற்கு தேவையான பேராசிரியர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கேபிஆர் பொறியியல் கல்லூரி இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் செயல்திறனை ஊக்கப்படுத்தி தற்போதைய பொறியியல் சவால்களைச் சமாளிக்க மாணவர்களைத் தயார்படுத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img