கேஎம்சிஹெச் மருத்துவமனை கல்லீரல், கணையம் மற்றும் இரைப்பை குடல் நோய்களுக்கான ஊட்டச்சத்து குறித்த ஒரு நாள் சர்வதேச மாநாடான லிவர் நியூட்ரி கான் 2026-ஐ நடத்தியது.
இதில் “கேஎம்சிஹெச் லிவர் டயட்” அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லீரல் நோயாளிகள் சந்திக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக இந்த திட்டம் உருவாக் கப்பட்டுள்ளது.
கேஎம்சிஹெச் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குழு, கேஎம்சிஹெச் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறை மற்றும் டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் விரிவான கூட்டு ஆராய்ச்சியின் விளைவாக இந்த உணவு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி பேசுகையில், கல்லீரல் கொழுப்பு நோயின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் இம்மாநாடு காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.
கேஎம்சிஹெச் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தத் தொடர்ந்து ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்றார்.



