கோவை ஜெம் கேன்சர் சென்டர் மற்றும் ஜெம் அறக்கட்டளை இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்திய ‘கோவை மகளிர் மாரத்தான் 2026’ போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தானை ஜெம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பி. பிரவீன்ராஜ் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
இதன் தொடக்க விழாவில் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் கண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

இதில் குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீராங் கனைகள் என 3000க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்திய அளவில் கோவையில் மட்டும் தான் பெண்களுக்காக நடத்தக்கூடிய மாரத்தான் போட்டி எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாரத்தான் போட்டியில் பெண்கள் பங்கேற்று உள்ளதாகவும், இந்த மாரத்தான் போட்டியில் வரும் வருவாய்களை முழுமையாக புற்று நோய்க்கு செலவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

வெற்றியாளர்கள் பட்டியல்: 21 கி.மீ (அரை மாரத்தான்):
18-39 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் முதலிடம் ஐஸ்வர்யா, 2ம் இடம் வித்யா, 3ம் இடம் கிருத்திகா, 40-49 வயதில் முதல் ரேணுகா, 2வது ஸ்ரீதேவி, 3வது நித்யா, 50+ வயதில் முதல் ரமா, 2வது லவ்லி ஜான்சன், 3வது விஜயா, இதேபோல் 10 கி.மீ பிரிவிலும் பல்வேறு பிரிவு மற்றும் ஓபன் பிரிவில் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.



