fbpx
Homeபிற செய்திகள்கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லூரியின் 4வது பட்டமளிப்பு விழா

கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லூரியின் 4வது பட்டமளிப்பு விழா

கோவையில் உள்ள குமரகுரு கலை அறிவியல் கல்லூரியின் 4-வது பட்ட மளிப்பு விழா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் 8 இளங்கலை மற்றும் 2 முதுகலை பாடப்பிரிவு களைச் சேர்ந்த 408 மாண வர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, இந்த மாணவர்கள் 4 தங்கப்பதக்கங்கள் உட்பட 27 பல்கலைக்கழக ரேங்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கல்லூரி முதல்வர் டாக்டர் சி. தீபேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து குமரகுரு கல்வி நிறுவனங்க ளின் தலைவர் சங்கர்வானவ ராயர், “புதிய இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளாக மாணவர்கள் மாற வேண் டும்“ என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் ராஜன் ஆர். நவானி பேசியதாவது: ஆரஞ்சு பொருளாதாரம் எனப்படும் படைப்பாற்றல் பொருளாதாரம், இன்று மிகப்பெரிய துறையாக வளர்ந்து வருகிறது.]

ஈ-ஸ்போர்ட்ஸ், டிஜிட்டல் பொழுது போக்கு போன்ற வற்றின் மூலம் இந்திய இளைஞர்கள் உலகளாவிய சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரு கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


இந்த விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர், இணைத் தாளாளர், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img