fbpx
Homeபிற செய்திகள்மண்டல கல்லூரிகள் கபடி போட்டியில் கோவை கே.ஐ.டி- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி அணி அபார...

மண்டல கல்லூரிகள் கபடி போட்டியில் கோவை கே.ஐ.டி- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி அணி அபார வெற்றி

கோவை கண்ணம் பாளையத்தில் உள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரியில், அண்ணா பல்கலைக் கழகத்தின் 9-வது மண்டல கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி (ஆண்கள்) இருநாட்களாக கல்லூரி வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்க ழகத்தின் கீழ் உள்ள 9-வது மண்டலத்தைச் சேர்ந்த 12 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் மோகன்தாஸ் காந்தி தலைமை ஏற்று, வீரர்களை வாழ்த்திப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். முன்னதாக அவர் தேசியக் கொடி ஏற்றினார்.

அரை இறுதி போட்டி

ஆர்.வி.எஸ் தொழில்நுட்ப வளாகம் மற்றும் கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற அரை இறுதி போட்டியில் ஆர்.வி.எஸ் தொழில்நுட்ப வளாகம் அணியை 7-34 என்ற புள்ளிக்கணக்கில் கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி அணி வென்றது.

கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற அரை இறுதி போட்டியில் கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி அணியை (10-29) என்ற புள்ளிக்கணக்கில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி அணி வென்றது.

இறுதி போட்டி

இறுதி போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற இறுதி போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியை (25-40) என்ற புள்ளிக்கணக்கில் கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி அணி வென்றது.

மேலும் இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா.பழனிச்சாமி, கல்லூரித்துணைத் தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி துணை முதல்வர் முனைவர் வி.ரமேஷ் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் அ.ஜெயபிரகாஷ், க.ஜெகநாதன், ம.தினேஷ் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்று வீரர்களை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img