fbpx
Homeபிற செய்திகள்கோவை கங்கா மருத்துவமனையில் முதல் முறையாக ரோபோ உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

கோவை கங்கா மருத்துவமனையில் முதல் முறையாக ரோபோ உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

கோவை கங்கா மருத்துவமனை யில் முதல் முறையாக ரோபோ மூலம் மூட்டு மாற்று சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
கங்கா மருத்துவமனை இயக்குன ரும் சர்வதேச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவரு மான டாக்டர் எஸ் ராஜசேகர் கூறியதா வது.
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் துரிதமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக ஏராளமான பேருக்கு கால் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் முழங்கால் கீல்வாதம் என்பது முழங்கால் மூட்டு வீக்கம், வலி மற்றும் விறைப்பு தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இது அன்றாட நடவடிக்கைகளை வெகு வாக பாதிக்கிறது. கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஆகியவை முழங்கால் மூட்டுவலியின் மிகவும் பொதுவான வகைகள் ஆகும்.

50 வயதுக்கு மேல்
கீல்வாதம் என்பது 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதி னருக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு விதமான மூட்டு தேய்மானம்ஆகும். இதேபோல் முடக்கு வாதம் என்பது தன்னுடல் தாக்க நோயாகும். இதில் நோய் எதிர்ப்பு அமைப் பானது சாதாரண திசுக்களை சேதப்படுத்துகிறது. எலும்பை மென் மையாக்குகிறது. இளம் வயதினருக்கு கூட இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. கீல்வாத பாதிப்பு என்பது ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. வயதுக்கு ஏற்ப இதன் பாதிப்பானது மாறுபடுகிறது.
வயதானவர்களுக்கு இதன் பாதிப் பானது அதிக அளவில் ஏற்படுகிறது.

நோய்களின் பாதிப்பு குறித்து உலகளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கீல்வாதம் என்பது 50 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதாகவும், உலக ளவில் இரண்டாவது பொதுவான தசைக்கூட்டு பிரச்சினையாக இது இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக செயல்பாடுகள் குறைதல், வேலைகளை செய்ய முடியாமை மற்றும் இயலாமை போன்றவை ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

கீல்வாத நோய் பாதிப்பு என்பது 60 வயதை கடந்த ஆண்களில் சுமார் 10 சதவீதம் பேருக்கும், பெண்களில் 15 சதவீதம் பேருக்கும் ஏற்படுகிறது. இந்தியாவில் 22% முதல் 39% வரை இந்த நோய் பரவலாகக் காணப்படுகிறது. சமூகம் சார்ந்த ஆய்வில், முழங்கால் கீல்வாதத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது 28.7 சதவீதமாக உள்ளது. முழங்கால் வலி என்பது தமிழ்நாட்டின் கிராமப்புற பெரியவர்களிடையே 18.6 சதவீதம் பரவலாக காணப்படும் பொதுவான மூட்டு பிரச்சனையாகும் என்று கடந்த 2015-ம் ஆண்டு வெளியான முத்துநாராயணன் மற்றும் பலரின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

கீல்வாத சிகிச்சை
கீல்வாதத்தின் ஆரம்ப சிகிச்சை பிசியோதெரபி, வாழ்க்கை முறை மாற்றம், எடை குறைப்பு மற்றும் வலி நிவாரணிகள் ஆகியவை ஆகும். மூட்டுவலி கடுமையாக இருக்கும் பட்சத்தில் மற்றும் அதன் காரணமாக அதிக பாதிப்பு இருக்கும் நிலையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வாக இருக்கும்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது வலியைப் போக்கவும், காலில் உள்ள பிரச்சினையை சரி செய்யவும் மற்றும் இயல்பான செயல் பாடுகளை மீண்டும் தொடங்க உதவும் ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறையாகும். பால், ஆசாத் மற்றும் பலர் மற்றும் இடுப்பு மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான இந்திய சங்க பதிவுகளின்படி, இந்தியாவில் சுமார் ஒன்றரை கோடி முதல் 2 கோடி நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப் படுகிறது. ஆனால் இதில் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாமை, பொருளாதாரம் மற்றும் பல்வேறு காரணங்களால் பலர் அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துகிறார்கள்.
மூட்டு மாற்று பிரிவு

650 படுக்கை வசதிகளுடன் 36 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய எலும்பியல் மருத்துவமனைகளில் ஒன்றாக கோவையில் உள்ள கங்கா மருத்துவமனை விளங்கி வருகிறது.
மூட்டு பிரச்சினையால் ஏற்படும் வலி மற்றும் இயலாமையைப் போக்குவதில் இம்மருத்துவமனையின் மூட்டு மாற்று (ஆர்த்ரோபிளாஸ்டி) சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை ஆண்டுக்கு 150-க்கும் மேற்பட்ட மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை உட்பட 2500-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது. இம்மருத்துவமனை மூட்டு சம்பந்தமான அனைத்து பிரச்சினை களுக்கும் சிறந்த தீர்வளிக்கிறது.

இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக இம்மருத்துவமனை உள்ளது. கீல்வாதத்தால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக புதிய தொழில்நுட்பங்களை இம்மருத்துவ மனை பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ரோபோ அறுவை சிகிச்சை முறையை கொண்டு வந் துள்ளது.

துல்லியமாக
ரோபோடிக் மூலம் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது மிகத் துல்லியமாக இருக்கும்.
இந்த சிகிச்சை முடிந்த குறுகிய காலத்திலேயே நோயாளி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அறுவை சிகிச்சைக்குப்பின் எந்தவிதமான வலி மற்றும் பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும். அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளிக்கான திட்டமிடலை மேற்கொள்கிறார். ரோபோ அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்கிறது. இந்த திட்டமிடல் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகிறது. நோயாளியின் உடற்கூறுகளுக்கு ஏற்ப இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முறை மூலம் மூட்டுகள் வேகமாக மறுசீரமைக்கப்படுகின்றன மற்றும் நோயாளி இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பலாம்.

வெலிஸ் ரோபோ ஏன்?
பல்வேறு ரோபோட்டிக் சிகிச்சை முறைகளில் வெலிஸ் ரோபோவை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். ஆசியாவிலேயே முதல் முறையாக வெலிஸ் ரோபோ சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளோம். வெலிஸ் ரோபோட்டிக் தொழில்நுட்பமானது பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. இதை கம்ப்யூட்டர் மூலம் எளிமையாக கையாள முடியும். இதன் காரணமாக சிடி ஸ்கேன் செய்ய வேண்டிய அவ சியம் இல்லை. தேவையில்லாத கதிரியக்க சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது இல்லை. அத்துடன் பணமும் மிச்சமாகும். இந்த சிகிச்சை நோயாளிகளுக்கு சிறப் பான பலனைத் தரும். இதில் உள்ள புரோஅட்ஜெஸ்ட் சாப்ட் வேர் நோயாளியின் குறிப்பிட்ட தனிப்பய னாக்கப்பட்ட சீரமைப்பு மற்றும் மென்மையான திசு சமநிலையை அனுமதிக்கிறது. இதில் உள்ள அக்யூபேலன்ஸ் என்னும் சாப்ட்வேர் முழங்கால் இயக்கத்தின் முழு அளவிலான கூட்டு சமநிலையை காட்சிப்படுத்துகிறது என்று இம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இன்றைய நவீன உலகைப் பொறுத்தவரை ‘இயக்கமே வாழ்க்கை மற்றும் வாழ்க்கையே இயக்கம்’ என்ற நிலை உள்ளது. ஒருவருக்கு மூட்டுவலி அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவரால் இயல்பான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இது நோயாளிகளுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
முதலாவதாக, இதுபோன்ற வலிகள் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை மிகவும் பாதிக்கும். சில நேரங்களில் இரவு தூக்கத்தையும் கெடுக்கலாம். இரண்டாவதாக, தனிநபரின் சுதந்தி ரத்தைப் பறிப்பதோடு, மற்றவரை சார்ந்து இருக்கச் செய்யும். மூன்றாவ தாக மிக முக்கியமாக, இது நோயாளிக்கு நம்பிக்கையின்மை மற்றும் சுயமரியாதை இழப்பை ஏற்படுத்து கிறது.
இதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறந்த பயனுள்ள தீர்வாக இருக்கும்.

முழங்கால் மாற்று சிகிச்சை மிகவும் வெற்றிகரமான செயல்முறை யாக இருந்தாலும், ரோபோடிக் உதவி தொழில்நுட்பம் இந்தத் துறையில் அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது. இது நோயாளியின் உடற்கூறியலுக்கு ஏற்ப பிரச்சினை உள்ள இடத்தை துல்லியமாக கண்டறிய உதவுகிறது. இதில் உள்ள அதிநவீன சாப்ட்வேர்கள் முழங்காலின் முழுமையான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. இந்த தொழில்நுட்பம் நோயாளிக்கு நவீன சிகிச்சை அளித்து முழங்கால் பிரச்சினைக்கு தீர்வு அளிப்பதோடு, அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய அவசியத்தையும் வெகுவாக குறைக்கிறது. அவரின் இயல்பான வாழ்க்கைக்கான சிறந்த சிகிச்சையாகவும் இது உள்ளது.

இவ்வாறு டாக்டர் எஸ் .ராஜசேகர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img