பிறந்து 90 நாட்களே ஆன இலங்கையைச் சேர்ந்த குழந்தைக்கு, ஜி.கே.என்.எம்.மருத்துவம னையில், இரட்டை சுவிட்ச் அறுவை சிகிச்சை மற்றும் விஎஸ்டி (வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு) மூடல் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
இலங்கையைச் சேர்ந்த 3 மாத ஆண் குழந்தை, பிறந்த உடனேயே, சுவாசிப்பதில், உணவு உட்கொள்வதில், அதிக வியர்வை, எடை அதிக ரிப்பதில் தாமதம், நீல நிற மாற்றம் ஆகிய தொந்தர வுகளால் அவதிப்பட்டது. இதைத்தொடர்ந்து இலங் கையில், செய்யப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு பிறப்பு தொடர்பான முக்கிய இதயப் பிரச்சினைகளில் ஒன்று கண்டறியப்பட்டது. இலங்கையில் பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தைக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. இந்தியாவில் உள்ள டெல்லி, சென்னை, பெங் களூருவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் குழந்தையின் பெற்றோர் தொடர்பு கொண்டபோது, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர் கள் அனைவரும் அதிக ஆபத்தை கருத்தில் கொண்டு அறுவைசிகிச் சைக்கு மறுப்பு தெரிவித் தனர்.
பின்னர், கோவையில் ஜிகேஎன்எம் மருத்துவ மனையை குழந்தையின் பெற்றோர் அணுகினர். அபாயத்தை விளக்கிய பின், குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இரட்டை சுவிட்ச் அறுவைசிகிச்சை
இதய குறைபாட்டின் சிக்கலான தன்மையை நன்கு புரிந்து கொள்ள சிடி ஸ்கேன் மூலம் 3டி மறுகட்டமைப்பைச் செய்தோம். போதுமான தகவலைப் பெற்றபிறகு, குழந்தையை மிகவும் சிக்க லான இரட்டை சுவிட்ச் அறுவைசிகிச்சை மற்றும் விஎஸ்டி மூடுதலுக்கு அழைத்துச் சென்றோம். சுமார் 12 மணி நேரம் அறுவைசிகிச்சை நடந்தது. குழந்தையின் மார்பு 48 மணி நேரம் திறந்து வைக் கப்பட்டு, மார்பு மூடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு குழந்தை விரைவில் குணமடைந்து 14-வது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
பெரிய தமனிகளின் இடமாற்றத்தை சரி செய்வதற்காக இரட்டை சுவிட்ச் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இரட்டை சுவிட்ச் செயல் பாட்டில் இதயத்தின் மேல் அறைகளை (ஏட்ரியல் சுவிட்ச்) மாற்றுவது மற் றும் பெரிய தமனிகளை (தமனி சுவிட்ச்) மாற்று வது ஆகியவை அடங்கும். குழந்தைகளில் இது மிகவும் முக்கியமான திறந்த இதய அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவைசிகிச்சை இந்தியா முழுவதும் ஒரு சில மையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. வளரும் நாடுகளில் உள்ள பெரும்பாலான அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சையை குறைந்தது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங் களுக்கு ஒத்தி வைக்க விரும்புகிறார்கள்.
வெற்றிகரமான அறுவைசிகிச்சை
இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சையை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் குழந்தைகள் இருதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.விஜயகுமார் தலைமை யிலான மருத்துவக் குழு மேற்கொண்டது. குழந் தைகள் இருதய மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கௌஷிக், அவரது குழு, குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் வினோத், அவரது குழு, பெர்ஃபியூஷனிஸ்ட் சுமதி, அவரது குழு உள்ளிட்டோர் அறுவை சிகிச்சையில் அங்கம் வகித் தனர். குழந்தைகள் இருதய நோய் நிபுணர் டாக்டர் எம்.கல்யாண சுந்தரம், தஞ்சாவூர் குழந்தைகள் இருதய நோய் நிபுணர் டாக்டர் மணி ராம் ஆகியோர் இருதயத்தின் முப்பரிமாண வடிவத்துடன் உதவினர்.
இவ்வாறு ஜிகேஎன்எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.