fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

தர்மபுரியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

தர்மபுரி ரோட்டரி சங்கம் மற்றும் கோயமுத்தூர் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் தர்மபுரி ரோட்டரி அரங்கில் நடைபெற்றது. முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.


கோவை ஜெம் மருத்துவமனை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரத் குமார் முன்னிலை வகித்தார். ஜெம் மருத்துவமனை தலைவரின் செயலாளர் சண்முகராஜ் வரவேற்று பேசினார். தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டி.என்.சி. மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமின் நோக்கங்கள் மற்றும் பயன்கள் குறித்து பேசினார்.

ஜெம் மருத்துவமனை


இந்த முகாமில் ஜெம் மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் சந்தோஷ் பாப்பண்ணா, மஞ்சுலதா, விஜயகுமார், விவேகானந்த்,பிரதீப், வினித், நவீன், அமல் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் ஸ்கேன், எண்டோஸ் கோபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.


முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் முன்னாள் துணை ஆளுநர் கோவிந்தராஜ், சங்க நிர்வாகிகள் தியாகராஜன், அப்பாவு, குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img