மூத்த குடிமக்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ‘டிபிஎஸ் கோல்டன் சர்க்கிள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக டிபிஎஸ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள இந்திய குடிமக்களுக்கு, வங்கிச் சேவையை எளிமையாக்குவதுடன் மிகவும் பலனளிக்கும் வகையில் உபயோகமாக அமையும். டிபிஎஸ் கோல்டன் சர்க்கிள்’ திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று சேமிப்பு கணக்குகள் மற்றும் வைப்பு நிதிகளுக்கு வழங்கப்படும் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் ஆகும். மூத்த குடிமக்கள் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான சேமிப்பு கணக்கு இருப்புகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறலாம்.
டிபிஎஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் நுகர்வோர் வங்கி சேவைகள் பிரிவின் தலைவருமான பிரசாந்த் ஜோஷி கூறுகையில், “டிபிஎஸ் கோல்டன் சர்க்கிள் திட்டம் மூத்த குடிமக்களுக்கு வங்கிச் சேவையை எளிதாகவும் வசதியாகவும் ஆக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை, பாதுகாப்பு, வசதி மற்றும் செளகரியம் ஆகியவற்றில் இத்திட்டம் முழு கவனத்தைச் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.