Homeபிற செய்திகள்78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேபிஆர் ப்ரைடு பெல்லோஷிப் அறிவிப்பு

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேபிஆர் ப்ரைடு பெல்லோஷிப் அறிவிப்பு

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  கேபிஆர் ப்ரைடு பெல்லோஷிப் என்ற பெயரில் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தை கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மை இயக்குநர் அனந்த கிருஷ்ணன்  அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் முனைவர் பட்டப் படிப்பு சேர்க்கை (24.8%) அதிகமாக இருந்தபோதிலும் கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாகக் குறைந்துள்ளது.

இந்த முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு புதிய பொறியியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க, கேபிஆர் ப்ரைடு பெல்லோஷிப் என்ற பெயரில் உதவித்தொகை வழங்க முடிவு செய்து, அறிவித்தது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் 100 ஆராய்ச்சியாளர்களுக்கு கற்றல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின்றி மாதாந்திர அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img