fbpx
Homeபிற செய்திகள்கதிர் கலை அறிவியல் கல்லூரியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கதிர் கலை அறிவியல் கல்லூரியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கதிர் கலை அறிவியல் கல்லூரியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கதிர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் இ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்ததுடன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.கற்பகம் வாழ்த்திப் பேசினார். மேலும் சுதந்திரத்தின் கடமையினையும் நாட்டின் பெருமையினையும் எடுத்து ரைக்கும் வண்ணம் மாணவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைத் தரித்து அணிவகுத்து வந்து தியாக உணர்வினையும் எடுத்துரைத்தனர்.

அதன் பின்னர் மாணவ, மாணவிகளின் பேச்சு கருத்துரையும் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வினை விளையாட்டுத் துறையின் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.வசந்தகுமார் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img