போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பு நிதி கருணைத் தொகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளதாவது:
போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரை சார்ந்தோருக்கு (மனைவி/பெற்றோர்) வழங்கப்பட்டு வரும் தொகுப்புநிதி கருணைத் தொகை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆகவும் மற்றும் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்புநிதி கருணைத் தொகை ரூ.50,000/- லிருந்து ரூ.1,00,000/- ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்
இவ்வுயர்வு 23.09.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விவரம் அறிய கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.