fbpx
Homeதலையங்கம்பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை!

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை!

பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கி கௌரவித்து இருக்கிறார்.

இதற்கிடையில் பாரிஸில் உள்ள லா செய்னே முசிகலே என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டில், உலகத் திருமுறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்ற, யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை திடீரென வெளியிட்டு தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளார்.

தமிழ்ப் புலவர் திருவள்ளுவருக்கு இந்திய வரலாற்றில் சிறப்பான இடமுண்டு. இவரது சிறப்பை பிரான்ஸ் மக்களும் கொண்டாடும் வகையில் திருவள்ளுவர் சிலை பிரபலமடையும். இது பிரான்ஸ் நாட்டின் செர்கே பிரிஃபெக்சர் பகுதியில் அமைக்கப்படும். இந்த சிலை தமிழகத்திற்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் இடம்பெற்ற கருத்து ஒன்றை சுட்டிக் காட்டினார்.

தனது குழந்தை பிறரால் பாராட்டப்படும் போது ஒரு தாய்க்கு எந்த அளவிற்கு இன்பம் கிடைக்குமோ? அப்படி ஒரு தருணத்தை உணர்வதாக குறிப்பிட்டார்.
தமிழருக்கு சிறப்பு சேர்க்கும் இன்னொரு கருத்தையும் பிரதமர் மோடி, அந்த விழாவில் நினைவு கூர்ந்தார்.

உலகின் மூத்த மொழி தமிழ் தான் என்றும் அது இந்தியாவில் இருப்பது பெருமையாக இருக்கிறது என்றும் அவர் முழங்கி இருக்கிறார்.
பிரதமர் மோடியை தமிழர்கள் அனைவரும் நன்றியோடு போற்றுகிறார்கள்.
நாமும் பாராட்டுவோம்!

படிக்க வேண்டும்

spot_img