ஆயுர்வேதத்தில் 80 ஆண்டுகள் சேவையாற்றியதை முன்னிட்டு, ஏ.வி.பி. (ஆர்ய வைத்ய பார்மஸி) கஞ்சிக்கோடு மையத்தில் தங்கள் நிறுவன தினத்தை 12-7-23 அன்று கொண்டாடியது.
மேலாண்மை இயக்குநர் சி.தேவிதாஸ் வாரியர் விழாவைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் கிருஷ் ணதாஸ் வாரியர்-, தலைமை நிர்வாக அதிகாரி விபின் விஜய் – மற்றும் திரு கிருஷ்ணா வாரியர் – நிர்வாக துணைத் தலைவர் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர்.
ஏ.வி.பி.யுடன் தொடர்புடைய மற்றும் ஆயுர்வேதத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மருத்துவர்கள் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி.வி.பி., டாக்டர். பி.உபேந்திரன், டாக்டர். வாசுதேவகிமல்.ஆர், டாக்டர் பாலகிருஷ்ணன்.எம்.ஏ, டாக்டர் எம்.பி.முரளீதரன் மற்றும் டாக்டர் வசுமதி.பி) ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் தொழிற்சங்கத் தலைவர் களான ஆர்.விஜயன் குனிஸ்சேரி (ஏஐடியுசி), எஸ்.பி.ராஜு (சிஐடியு), எஸ்கே. ஆனந்தகிருஷ்ணன் (ஐஎன்டியுசி) ஆகியோரை நிறுவனம் கௌரவித்தது.
அதேபோல தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரளாவுக்கான பிரம்மா குமாரிஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சகோதரி மீனா பெஹனும் விழாவில் ஏவிபி நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்டார்.
ஏவிபி ஆனது ஆயுர்வேத பொருட்கள் மற்றும் சேவைகளின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான இந்த நிறுவனம் 1943ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான ஆர்ய வைத்யன் பி.வி.ராம வாரியரால் தொடங்கப்பட்டது,
இதன் தலைமையிடம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ளது. இதன் தயாரிப்புகள் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் அவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டவை.
ஆயுர்வேத பயிற்சியாளர்கள் மற்றும் சிகிச்சைகள், மருந்து உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வியாளர்கள் மற்றும் ஏற்றுமதிகள் மற்றும் ஆயுர்வேத ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்த பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவை நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



