fbpx
Homeபிற செய்திகள்கோவை கொடிசியாவில் அக்ரி எக்ஸ்போ பிரம்மாண்ட துவக்கம்

கோவை கொடிசியாவில் அக்ரி எக்ஸ்போ பிரம்மாண்ட துவக்கம்

தேசிய அளவில் பிரபலமான அக்ரி இன்டெக்ஸ் 2023 வேளாண் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் 450க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.

தேசிய அளவில் பிரபலமான அக்ரி இண்டெக்ஸ் வேளாண் கண்காட்சி கோவையில் துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில் வேளாண் துறை சார்ந்த உள்நாடு மற்றும் வெளிநாடு நவீன தொழில்நுட்பங்கள் காட்சி படுத் தப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதன்மையான வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன் றான அக்ரி இன்டெக்ஸ் 2023 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளா கத்தில் நேற்று துவங்கியது.

21வது பதிப்பாக நடைபெறும் இந்த விவசாய கண்காட்சியில் துல்லிய வேளாண்மை மற்றும் நுண்ணீர் பாசனம் மூலம் இந்திய வேளாண்மையில் மாற்றங்களை உருவாக்கும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரியா, இஸ்ரேல், ஜப்பான், ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

சுமார் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ள இக்கண்காட்சியில், நவீன ட்ரோன் கருவிகள், ஆட்டோமேஷன், சூரிய ஒளி பம்புகள், நுண்ணீர்ப்பாசனம், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், குறைந்த நீர் பயன்பாட்டு விவசாய முறைகள், மதிப்பு கூட்டுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு தானியங்கி முறைகள், கூட்டு மதிப்பு பொருள்கள், அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம், வேளாண் சந்தை, உள்ளிட்ட சிறப்புக் தொழில்நுட்ப அரங்குகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடைப் பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த வேளாண் கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து வேளாண் நிபுணர்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையினர், இடுபொருள் , விதை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த மாபெரும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடதக்கது.

படிக்க வேண்டும்

spot_img