முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தவசி மண்டபம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் சின்ன காலை, கிழக்கு மண்டல தலைவர் மிக்கேல், தெற்கு மண்டல தலைவர் எஸ். பி. ராஜன், மாவட்ட சேவாதளம் தலைவர் கே.டி.எம். ராஜா, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மாவட்ட துணைத்தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், விஜயராஜ், பிரபாகரன், ரஞ்சிதம் ஜெபராஜ், ஜெய ஜோதி, அருணாசலம், மாவட்ட செயலாளர்கள் குமார முருகேசன், நாரா யணசாமி, வெங்கட் சுப்பிரமணியன் ணிஜ்.விசி, அந்தோணி ஜெயராஜ், அந் தோணி சாமி, கிருஷ்ணன், வார்டு தலைவர்கள் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.