சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி வழி தகவல் தொடர்பியியல் துறை மற்றும் Ero Media இணைந்து உலக புகைப்பட தின விழா கொண்டாட்டப்பட்டது .
அதில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரியின் தாளாளர் ஏ.எம்.கந்தசாமி, செயலாளர் கே.சவிதா மோகன்ராஜ், முதல்வர் டாக்டர் ஆர். ராம்குமார், துறைத் தலைவர் கே.செந்தமிழ் ராஜ் மற்றும் சிறப்பு விருந்தினராக யுவராஜ் சின்னசாமி ஆகியோர் உலகப் புகைப்படத்தை பற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர்.
சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செலின் ராணி மாணவர்களுக்கு பன்முக திறமைகளை வளர்த்துக் கொள்ளு மாறு அறிவுரை வழங்கினார்.
இதையொட்டி நடந்த போட்டியில் முதல் பரிசு ஆனந்த்.வி (ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), இரண்டாம் பரிசு மனோஜ் (சின்னசாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), மூன்றாம் பரிசு தீபிகா ஜி (சசூரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆகியோருக்கு கிடைத்தன. அவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டது.