fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநகராட்சிக்கு கோரிக்கை மனு

கோவை மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநகராட்சிக்கு கோரிக்கை மனு

கோவை மாவட்டம், மாநகராட்சி அனைத்து சாலையோர சிறு வியாபாரிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இதில் அவர்கள் கூறியதாவது:

கோவை மாநகராட்சி அனைத்து சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டுகிறோம். மாநில அரசு மற்றும் மத்திய அரசின் ழிஹிலிவி திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.

கோவை மாநகராட்சி அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை கிடைப்பதற்கு தாமதம் ஆகுகிறது. விரைவில் கிடைக்க உதவி புரிய வேண்டுகிறோம்.
வியாபாரிகள் குழு அதற்கான தேர்தல் மிக விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.

சாலையோர வியாபாரி களுக்கு அவரவர் வங்கி கணக்கில் அந்தந்த வங்கி கணக்கின் மூலம் 10,000 ரூபாய் வங்கி கடன் வழங்கும் திட்டம் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img