Homeபிற செய்திகள்கீழ்பவானி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கீழ்பவானி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் கீழ்பவானி திட்ட அணையில் இருந்து வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்து சாமி, செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஆகியோர் வியாழக்கிழமை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.
விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, எம்பி கே.இ.பிரகாஷ், எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், இளங்கோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1.035 லட்சம் ஏக்கரில் புஞ்சை பயிர் சாகுபடிக்கு அடுத்த 120 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று முத்துசாமி தெரிவித்தார்.

விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வினாடிக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்து விடப் படும். எல்பிபி பிரதான கால் வாயில் மராமத்து பணிகள் முடிவடைந்து, பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுங்கரா கண்காணித்து வருகி றார். கால்வாய் கான்கிரீட் அமைக் கும் பிரச்னை ஏற்கனவே தீர்க்கப்பட் டது. 105 அடி உயரமுள்ள அணையில் 96 அடி அளவிற்கு நீர் உள்ளது.

எல்.பி.பி விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான விதைகள் மற்றும் உரங்கள் வேளாண் துறையிடம் உள்ளது. அத்திக்கடவு அவினாசி குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட் டங்களில் உள்ள 1045 குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு பவானி காலிங்க ராயன் தடுப்பணையில் இருந்து பவானி ஆற்று நீரை பம்ப் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img