fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கல்லூரியில் பண்பாட்டுத்திறன் திருவிழா

கொங்குநாடு கல்லூரியில் பண்பாட்டுத்திறன் திருவிழா

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 2K26- பண்பாடு மற்றும் திறன் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் கோவை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 25-க் கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

மேடை நிகழ்ச்சிகள் விழாவிற்கு வண்ணமும் உற்சாகமும் சேர்த்தன. தனிநபர் நடனம், குழு நடனம், தனிநபர் பாடல், குழு பாடல், மைம், அட்சாப் (Adzap), டப்ஸ்மாஷ் போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியாளர்கள் உற்சாகமான நடனங்களாலும் இனிமையான பாடல்களாலும் வெளிப்பாடுமிக்க மைம் நிகழ்ச்சிகளாலும் புதுமையான விளம்பர கற்பனைகளாலும் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

அதேவேளை வினாடி வினா, போஸ்டர் வடிவமைப்பு, புகைப்படம், ரங்கோலி மற்றும் புதையல் வேட்டை போன்ற போட்டிகள் மாணவர்களின் அறிவாற்றல் மற்றும் படைப்புத் திறன்களைச் சோதித்தன.

இப்போட்டிகள் பகுத்தறிவு சிந்தனை, குழு பண்பு, கலைநயம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை ஊக்குவித்தன.

இவ்விழாவின் சிறப்பம் சமாக, தனலட்சுமி ஆறுச்சாமி பல்நோக்கு கலையரங்கத்தில் நடைபெற்ற நேரடி இசை நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் புன்யா பங்கேற்று தனது இனிமையான குரலாலும் உற்சாகமான மேடை நிகழ்ச்சியாலும் அனைவரையும் மெய்மறக்கச் செய்தார்.

போட்டிகள் அனைத்தும் படைப்பாற்றல், புதுமை, தொழில்நுட்பத் துல்லியம் மற்றும் மொத்த நிகழ்திறன் ஆகிய அடிப்படைகளில் மதிப்பிடப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img