கரூர் வட்டம், வெள்ளியணை பகுதியில் வேளாண்மை துறையின் சார்பில் ராபி பருவ பயிர் சாகுபடி விவரங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் நேற்று (19ம் தேதி) செய்தியாளர்கள் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கரூர் மாவட்டதிலுள்ள விவசாயிகளின் பயிர் விவரங்களை நவீன முறையில் துல்லியமாகப் பதிவு செய்ய டிஜிட்டல் பயிர் ஆய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் பயிரிடும் பயிர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் கையால் எழுதி பராமரிக்கும் பதிவேடுகளுக்குப் பதிலாக, நவீன காலத்திற்கேற்ப கைப்பேசி செயலி மூலம் நேரடியாக விளைநிலத்திற்கே சென்று தரவுகளை சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
செயற்கைக்கோள் வரை படங்கள் மூலம் நிலத்தின் எல்லைகளை சரியாக அடையாளம் காணப் பட்டு, பயிர் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு, பயிர் வகை மற்றும் அதன் வயது போன்றவற்றை களத்திலேயே அலுவலர் கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் பயிர் காப்பீடு, உர மானியம் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது இழப்பீடு வழங்க இந்தத் தரவுகள் அடிப்படையாக அமைகிறது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இதற்காக “பயிர் எண்ம கணக்கீட்டாய்வுப் பணி” எனும் சிறப்பு செயலியை உருவாக்கியுள்ளது. இது கள அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் பயிர் விவரங்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் முதன்மை செயலி. பதிவு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை துறையின் அலுவலர்கள் இந்த செயலி மூலம் சரிபார்க்கப்பட்டு, நிலத்தின் புவிசார் குறியீடுகளை உறுதி செய்த பின் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இப்பணிக்காக நியமிக்கப்பட்ட கள ஆய்வு அலுவலர்கள் ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் நேரடியாகச் சென்று, பயிர் விளைந்துள்ள நிலத்தின் புகைப்படத்தை ஜி.பி.எஸ் குறியீட்டுடன் செயலியில் பதிவேற்றம் செய்வார்கள். நிலத்தின் உரிமையாளர் பெயர், பயிரிடப்பட்டுள்ள பயிர், சாகுபடி காலம் போன்ற விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு, சேகரிக்கப்பட்ட தரவு கள் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
இதன் மூலம் வறட்சி அல்லது வெள்ளத்தினால் பயிர் சேதமடைந்தால், டிஜிட்டல் முறையில் பதிவான தரவுகளைக் கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் மற்றும் வங்கிகள் அல்லது கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடனுதவிகளையும்எளிதாக வழங்க முடியும். அரசுக்கு எந்தப் பகுதியில் எவ்வளவு விளைச்சல் உள்ளது என்பதை கண்காணித்து, கொள்முதல் நிலையங்களை திட்டமிட்டு அமைக்க முடியும்.
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்திலுள்ள 7 வட்டங்களில் உள்ள 6, 99, 910 உட்பிரிவில் இப்பணிகள் கடந்த 1.12.2025 அன்று தொடங் கப்பட்டு, இன்று வரை 5, 72, 917 உட்பிரிவுகளில், முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1, 26, 993 உட்பிரிவுகளில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் செ.தியா கராஜன், வேளாண்மை கல்லூரி மாணாக்கர்கள், தன்னார்வலர்கள், செய்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந் தனர்.



