Homeபிற செய்திகள்கோவை கொடிசியாவில் கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சி

கோவை கொடிசியாவில் கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சி

கோவை கொடிசியாவில் 3 நாட்கள் நடைபெறும் ஃபோர் புரோ 2024கண்காட்சி நேற்று(3-ந் தேதி) தொடங்கியது.

இந்தகண்காட்சியை தமிழ் நாடு அரசு டி.டி.சி.பி. இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்தார்.

விழாவில் ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் பிரகாஷ் குமார் சுபுதி, கிரெடாய் தலைவர் குகன் இளங்கோ, கண்காட்சி சேர்மன் சுரேந்தர் விட்டல், பொரு ளாளர் ராஜீவ் ராமசாமி மற்றும் அரவிந்த் குமார், அபிஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்

வருகிற 4 ந் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பங்கேற்றுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள், வங்கிகள், வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடம் பெற்று இருந்தன.

மேலும் இந்த கண்காட்சியில் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், ஏஜெண்டுகள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சி மூலம் நடைபெறும் சொத்து பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த கண்காட்சி தின சரி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img