கோவையில் இன்று அந்தகன் படம் குறித்து நடிகர் பிரசாந்த் நடிகைகள் சிம்ரன், ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் பிரசாந்த் கூறியதாவது
அந்தகன் படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
கண் தெரியாத கதாநாயகன் கொலை சம்பவம் குறித்து கண்டறியும் படம். இதற்கு முன்பு சைக்கோ படத்தில் உதயநிதி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தில் கண் தெரியாத ஹீரோவாக நான் நடித்துள்ளேன். இதை மிகவும் சிரமமான விஷயம். படத்தில் கிளைமாக்ஸ் பேசப்படும் விஷயமாக இருக்கும். அந்தகன் 2 குறித்து பேசி வருகிறோம்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனது இசை போல இல்லை என்று கூறியது ஏன் என்று தெரியவில்லை. படத்தின் தேவைக்காக அனிருத், விஜய் சேதுபதி ஆகியோர் பாடியுள்ளனர், கேரளா மாநிலம் வயநாடு நிலச் சரிவு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியையும் வேதனையையும் அடைய வைத்த சம்பவம் ஆகும்.
இதிலிருந்து யாரும் இன்னும் மீளவில்லை. திரை உலகத்தினர் அனைவரும் வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. இயற்கை சீற்றம் குறித்து படம் எடுத்தால் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இனி இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.