கோவை மாநகராட்சி தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட காய்கறி மார்க்கெட்டுகளை, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேற்று (நவ.23) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96க்கு உட்பட்ட சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட், மேற்கு மண்ட லம், வார்டு எண்.45, மேட்டுப்பாளையம் பிரதான சாலை பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அண்ணா மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பழுதுநீக்கி புனரமைப்பு பணிகள்
மார்க்கெட் அமைந்துள்ள சாலை பகுதிகள், மழைநீர் வடிகால்கள், கழி வறைகள், பாதாள சாக்கடைகள் உள்ளிட்டவற்றை பழுதுநீக்கி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து அரசிற்கு அனுப்பிட வேண்டுமென சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, தெற்கு மண்டலத் தலைவர் ரெ.தனலட்சுமி, மேற்கு மண்ட லத் தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், முருகேசன், அப்துல் காதர், உதவி ஆணையர் அண்ணாதுரை (தெற்கு), மண்டல உதவி ஆணையர் சேகர் (மேற்கு), செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர்கள் சத்யா, கலாவதி, உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜன், ஹரிபி ரசாத், நாகராஜ், சபரிராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.