சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் நிறுவனர் தின விழா, சிறந்த மாணவர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.
சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும் நற்பெயரும் ஒரே நாளில் உருவானதில்லை. இந்த நிலையை அடைவதற்கு நிறுவனரின் பல வருட அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு ஆகியவை தனித்துவமான வளர்ச்சி மற்றும் நற்பெயருக்கு வழிவகுத்தன.
இந்நாள் எங்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய மதிப்புகள் மற்றும் எண்ணங்களை நினைவூட்டுகிறது என்று இப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல்கலைக்கழக நாள் காட்டியில் இது மிகவும் முக்கிய நாளாகும்.
சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ்
பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் நிறுவனரும், தலைவரும் மற்றும் வேந்தருமான டாக்டர் என்.எம்.வீரயைனுக்கு மரியாதை செலுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இந்த நிறுவனர் நாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
அவருக்கு எங்கள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், ஊழியர்களும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அவரது தொலைநோக்கு சிந்தனை மற்றும் கற்பனையின் விளைவாகவே இந்த பிரமாண்ட கல்வி நிறுவனம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.
கலைமாமணி சுகிசிவம் உரையாற்றினார். கல்வித் துறையில் சிறந்து விளங்கிய 491 பேருக்கும், சிறந்த மாணவர்கள் 25 பேருக்கும், ஆராய்ச்சிக்காக 53 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
1172 மாணவர்கள் மற்றும் 700 பேராசிரியர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. கல்வி, ஆராய்ச்சி, விஞ்ஞானம், சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் என பல்வேறு துறைகளில் 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், விருதுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் பெற்றுள்ளது.