சுதந்திர தினத்தையொட்டி கோவை குனியமுத்தூரைச்சேர்ந்த ஓவியக் கலைஞர் யுஎம்டி ராஜா, இரண்டு விதமான விழிப்புணர்வுகளை ஒரே ஓவியத்தில் படைத்து அசத்தி இருக்கிறார். தலை காப்போம், தலைவர்களைப் போற்றுவோம் என்பன தான் அந்த விழிப்புணர்வுகள்.
தலைகவசத்தில் 10 தேசத் தலைவர்கள் ஓவியத்தை யுஎம்டி ராஜா வரைந்துள்ளார். இதில் மகாத்மா காந்தி, நேரு, பாரதியார், அம்பேத்கர், தாகூர், டாக்டர் ராதாகிருஷ்ணன், சுபாஸ்சந்திரபோஸ், ஆசாத், விவேகானந்தர், ராஜேந்திர பிரசாத் ஆகிய தலைவர்களின் ஓவியத்தை 7வண்ணங்களில் தீட்டியுள்ளார்.
இந்த ஓவியத்தை தீட்டி முடிக்க 7 மணி நேரம் ஆனதாக அவர் தெரிவித்தார்.