fbpx
Homeபிற செய்திகள்அமர்நாத் செல்லும் தமிழக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி கோரி பேரூர் ஆதீனம் மனு

அமர்நாத் செல்லும் தமிழக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி கோரி பேரூர் ஆதீனம் மனு

அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் பேரூர் ஆதீனம் மனு அளித்துள்ளார்.
பேரூர் ஆதீனம் சார்பில் தினந்தோறும் ஏழை, எளிய மக்கள் மற்றும் பக்தர்களுக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வட இந்தியாவில் நடை பெறும் அமர்நாத் யாத் திரைக்கு தமிழ்நாடு உள் ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர் கள் ஆண்டுதோறும் சென்று வருவதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான உணவு வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

அமர்நாத் யாத்திரை செல்லும் தென்னிந்திய பக்தர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை கருத்தில் கொண்டு, இட்லி, தோசை, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய சைவ உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி வழங்குமாறு துணைக் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தால், பஹல்காம் அருகே பக்தர்கள் பயன்பெறும் வகையில் உணவு வழங்கும் மையம் அமைக்கப்படும். இதன் மூலம் தென்னிந்திய பக்தர்கள் தங்களுக்கு பழக்கமான சைவ உணவுகளை எளிதாக பெற முடியும். ஆன்மிக சேவையுடன் மனிதநேய சேவையையும் இணைத்து செயல்படுவதே பேரூர் ஆதீனத்தின் நோக்கமாகும்.இவ்வாறு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img