fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம் சேலத்தில் நடைபெற்றது

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம் சேலத்தில் நடைபெற்றது

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சேலம் பிராந்திய அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. சேலத்தில் நடைபெற்ற இந்த நடைபயணத்தை அம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

வங்கியின் துணைப் பொது மேலாளர் மற்றும் பிராந்திய தலைவர் பி.எம்.செந்தில்குமார், உதவி பொது மேலாளர் நிம்மி பீட்டர் ஆகியோர் சுற்றுச்சூழல் குறித்து உரையாற்றினார்கள்.


பின்னர் பிராந்திய அலுவலகத்தில் இருந்து சேலம் ரயில்வே சந்திப்பு வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் குறித்த பதாகைகளைப் பிடித்துக் கொண்டும், கோஷங்களை எழுப்பியபடி நடைபயணம் மேற்கொண்டும் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இறுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img