fbpx
Homeபிற செய்திகள்ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிபிஎஸ் ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்க...

ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிபிஎஸ் ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்

கோவை மாவட்டம் சூலூரில் சிபிஎஸ் ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங் கத்தின் மாநில சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் சங்கத்தின் தலைவர் ஏ.சென்ராம், செயலாளர் வி.விஸ்வநாதன், பொரு ளாளர் எஸ்.சாமுவேல் செல்வராஜ், மாநில துணைத் தலைவர் எஸ்.என்.குணசேகரன், துணைப் பொதுச்செய லாளர் டாக்டர் ஸ்டா லைட் விமலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற் றுள்ள பள்ளிக் கல்வித்துறையை சார்ந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், உயர்கல்வித் துறையை சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.


கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
01-&04&-2003க்கு பின் சிபிஎஸ் திட்டத் தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்க ளுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.01-04-2003 முதல் 31-12-2025 வரை சிபிஎஸ் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிக்கொடை, மாதாந்திர நிரந்தர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மாதாந்திர ஓய்வூதியம் அகவிலைப்படி உடன் இணைத்து வழங்கப்பட வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.31-12-2025க்கு முன் ஓய்வுபெற்ற அனைத்து சிபிஎஸ் ஆசிரியர்களுக்கும் என்எச்ஐஎஸ் – புதிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மேற் கண்ட தீர்மானங்களை நிறை வேற்றித் தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img