fbpx
Homeபிற செய்திகள்தி ஒன் - ரோட்டராக்ட் கிளப் புதியதலைவராக பி.ஹரிஹரன் பதவியேற்பு

தி ஒன் – ரோட்டராக்ட் கிளப் புதியதலைவராக பி.ஹரிஹரன் பதவியேற்பு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸிட்டியின் ஆதரவுடன் செயல்படும் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் LIA (Lead India Ahead) தனது 13-வது பதவியேற்பு விழாவான தி ஒன் “The ONE” நிகழ்வை கோவை டெக்ஸிட்டி ஹாலில் நடத்தியது. 100-க்கும் மேற்பட்ட ரோட்ட ராக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட ரோட்டேரியன்கள், முன்னாள் உறுப்பினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ரொட். பி.ஹரிஹரன் 2026-27 ரோட்டரி ஆண்டிற்கான 13-வது தலைவராக பதவியேற்றார்.
கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய உடனடி முன்னாள் தலைவர் ரொட். ஹர்ஷித்தின் சேவையும் தலை மைத்துவமும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது.
விழாவின் முதன்மை விருந்தின ராக ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸிட்டியின் தலைவர் ரொ. எம்.டி.முகமது ஷாஃபி கலந்து கொண்டு புதிய நிர்வாகக் குழுவினருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் மாவட்ட ரோட்ட ராக்ட் பிரதிநிதி ரொட். MPHF. விஜய் விக்னேஷ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸிட் டியின் இளைஞர் சேவைத் தலைவர் ரொட். டாக்டர் இசட்.முகமது இர்பான், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ராயல்ஸ் தலைவர் ரொட். பி.வந்தியா தேவன், மற்றும் மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி (தேர்வு) ரொட்.PHF சஞ்சய் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நேரில் கலந்து கொள்ள இயலாத மாவட்ட ஆளுநர் ரொட். எம்.டி. ஆர்.எஸ்.மாருதி மற்றும் மாவட்ட ரோட்டராக்ட் சேர்மன் ரொட். PHF. செந்தில் குமார் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
“தலைமை என்பது சேவையிலிருந்து தொடங்குகிறது” என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில், புதிய தலைவர் ரொட். பி.ஹரிஹரன் கிளப்பின் 13-வது பதவியேற்பை நினைவு கூரும் விதமாக ரோட்டரி பவுண் டேஷனுக்கு (TRF)- 13 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கினார். மேலும், Deaf Leaders Foundation அமைப்பிற்கு மின்விசிறிகள் வழங்கப்பட்டதுடன், DADDS பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின் தொழிற்பயிற்சி செலவிற்காக ரூ.10,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.


2026-27 ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவில் ரொட். மனிஷா ஸ்ரீ (நிர்வாகச் செயலாளர்), ரொட். தமிழ்செல்வன் (தகவல் தொடர்புச் செயலாளர்), ரொட். சுஜய் கிருஷ்ணா (துணைத் தலைவர்), முன்னாள் தலைவர் ரொட். ஆண்டனி ரேவந்த் (கிளப் ஆலோசகர்), ரொட். யமுனா (பொருளாளர்), ரொட். நாகராஜ் (இணைச் செயலாளர்), ரொட். பிரஜ்வெல் (சமுதாய சேவை இயக்குநர்), ரொட். பாலக் (சர்வதேச சேவை இயக்குநர்), ரொட். சாந்தோஷ் (தொழில்முறை சேவை இயக்குநர்) ஆகியோருடன், பல்வேறு அவென்யூ இயக்குநர் கள், சேர்மன்கள், ஆசிரியர் குழு, ஊடகப் பிரிவு, உறுப்பினர் மேம்பாடு, ரத்ததான பிரிவு, இளம் தலைவர்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பா ளர்கள் இணைந்து பதவியேற்றனர்.ரோட்டராக்ட் கிளப் ஆஃப் லிமிகி தலைமைத்துவம், நட்பு மற்றும் அர்த்தமுள்ள சமூக சேவையின் மூலம் நிலையான மாற்றத்தை உருவாக்கும் புதிய பயணத்தை உற்சாகமாகத் தொடங்கியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img