கோவையில் நடை பெற்ற காமராஜர் கல்வித் திருவிழா மற்றும் ‘கல்வித்தந்தை தலை வர் காமராஜர்’ நூல் வெளியீட்டு விழாவில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பங்கேற்று, 250 அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
கோவை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் ஒலி வியா பதிப்பகம் இணைந்து நடத்திய விழாவில், ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூலை ஸ்ரீ ராம் பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாந்தா ராம் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை அமைச்சர் கே. விக்னேஷ் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் கோவை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவரும், நூலாசிரியரு மான தா. கருணா ஹரிராம், செயலாளர் அ.செ. வினோத், பொருளாளர் வி. முத்துக்குமார், செம் மொழிச் செல்வன் ராகுல் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



