சைக்கிள் ஓட்டுநர் சிவா சூர்யன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 10,000 கி.மீட்டருக்கும் மேற்பட்ட பயணத்தில் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தாய் கிரீன் பவர் சொல்யூஷன்ஸ் (TGPS), அவர்கள் நடத்திய கூட்டத்தில் சிவா சூர்யனை வைத்து காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த நேரடி அனுபவத்தை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து
TGPS புதுமையான பசுமை தீர்வுகள் மற்றும் நிலையான தயாரிப்புகளை வழங்குகிறது எனவும் வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க உதவுகின்றன எனவும் மேலும் இந்த நிறுவனம் நிலையான தன்மையை மேம்படுத்துவதற்கும் அனைவருக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உள்ளது எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிவா சூர்யன் தனது பணியை தொடர பொருளாதார உதவி வழங்கி கௌரவித்தனர். இது அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.



