ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியான ஓ பை தமாராவின் உணவகமான ஓ கஃபேவில் வரும் ஞாயிறு மதியம் 12.30 முதல் 3 மணி வரை ஈஸ்டர் சிறப்பு மதிய விருந்து நடைபெறவுள்ளது.
உள்ளூர் வகை உணவான அப்பம் முதல் உலகின் பல பகுதிகளில் மக்கள் விரும்பும் உணவு வகைகள் பலவும், வெவ்வேறு வகை சாலட், இனிப்புகள் இந்த விருந்தில் இடம்பெறும். குழந்தைகளுக்கு ‘புதையல் தேடும் போட்டி’ விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் பங்கேற்க பெரியவர்களுக்கு தலா ரூ.1599+ மற்றும் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.899+ கட்டணமாகும். இந்த கட்டணத்திற்கு விருந்துடன் தேநீர், காபி உள்ளடங்கும். விருந்தில் உள்ளடங்கும் வேறு எந்த உணவை ஆர்டர் செய்தாலும் அதற்கு கட்டணம் உண்டு.