fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்டத்தில் 17.40 லட்சம் வாக்காளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் 17.40 லட்சம் வாக்காளர்கள்

ஈரோடு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான எஸ் கந்தசாமி நேற்று வெளியிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் 98. ஈரோடு (கிழக்கு), 99. ஈரோடு (மேற்கு), 100.மொடக் குறிச்சி, 103. பெருந்துறை, 104. பவானி, 105. அந்தியூர், 106. கோபிசெட்டிபாளையம் மற்றும் 107. பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் படி 17,40,222 வாக்காளர்கள் உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:

ஈரோடு கிழக்கு: 1,76,228, ஈரோடு மேற்கு: 2,45,493, மொடக்குறிச்சி :2,06,122, பெருந்துறை: 2,12,084, பவானி: 2,21,393, அந்தியூர்: 2,05,737, கோபி: 2,37,581, பவானிசாகர்: 2,35,584.
8 தொகுதிகளிலும் 8,38,466 ஆண் வாக்கா ளர்களும் 9,01,574 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 17,40,222 பேர் உள்ளனர்.

மேற்கண்ட தகவலை தெரிவித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.கந்தசாமி, வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் எண் பதிவு, திருத்தம் போன்றவைகளுக்கான படிவங்களை வாக்காளர்கள் சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் வரை அரசு அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
வரும் 26 ஆம் தேதி சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை தேர்தல் ஆணையம் வழங்குகிறது, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img