கோவை ரத்தினம் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து அறிவியல், கணிதக் கண்காட்சி மற்றும் நிதி அறிவாற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். ரத்தினம் கிராண்ட் அரங்கில் நடைபெற்ற கண்காட்சியை பள்ளியின் தாளாளர் ஷீமா செந்தில் மற்றும் பள்ளியின் முதல்வர் ஆஷ்மி மற்றும் கல்வி நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் அபிநய சங்கரி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களது பல்வேறு சோதனைகள், செயல்விளக்க மாதிரிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதில் சூரிய குடும்பம், நீர்சுழற்சி, மின்சாரம் தயாரிக்கும் முறை போன்ற பல்வேறு திட்டங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. கணிதக் கண்காட்சியில் பரப்பளவு மற்றும் சுற்றளவு மாதிரிகள், வடிவியல் உருவங்கள், அலகு மாற்றங்கள், புதிர்கள் மற்றும் முப்பரிமாண மாதிரி போன்றவை அழகாக அமைக்கப்பட்டிருந்தன.
இதேபோல மாணவர்களின்
நிதி அறிவாற்றல் திறனை வளர்க்கும் நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தது. இக்கண்காட்சியில் 700க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.




