கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் டாக்டர் வி.பாரதி ஹரிசங்கர் முன்னிலையில் பார்வை குன்றிய 25 மாணவிகளுக்கு திருப்பூர் மஹிந்திரா வாட்டர் யூட்டிலிட்டிஸ் நிறுவனம் தனது சிஎஸ்ஆர் நிதியில் இருந்து உதவி வாசிப்பு சாதனம் (assistive reading device) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அவற்றை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.புகழேந்தி வழங்கினார். உடன் டாக்டர் யு.ஜெரினாபி (ஒருங்கிணைப்பாளர், எண்டோவ்மென்ட் அலுவலகம்), டாக்டர் பி.சாரதா (ஒருங்கிணைப்பாளர்,SEDGs செல் – அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவன சிறப்பு கல்வித் துறையின் RCI சான்றளிக்கப்பட்ட சிறப்பு மையம்) உள்பட பலர் உள்ளனர்.



