Homeபிற செய்திகள்மாநில வீட்டுவசதி துறை மேம்பாட்டுக்கு போதிய நிதியை மோடி அரசு வழங்குகிறது மத்திய இணை அமைச்சர்...

மாநில வீட்டுவசதி துறை மேம்பாட்டுக்கு போதிய நிதியை மோடி அரசு வழங்குகிறது மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் பேட்டி

மத்திய அரசால் மாநி லங்களுக்கு வழங்கப் படும் வீட்டுவசதி துறை மேம் பாட்டுக்கு போதுமான நிதியை மோடி அரசு வழங்கி வருவதாக மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அரசூரில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் சீன தற்காப்புக் கலையான உஷு நடுவர் களுக்கான பயிற்சி முகாம் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாளில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகா ரங்களுக்கான இணை அமைச்சர் கவுசல் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த பயிற்சியில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் விழாவில் அமைச்சர் கவுசல் கிஷோர் பேசியதாவது:
சீன தற்காப்புக் கலை யில் இந்தியர்கள் தேர்ச்சி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விளையாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயல் படுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இதனை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் சரியான உடல் மற்றும் மன நிலையைப் பெறுவார்கள் எனவே இது போன்ற விளையாட்டுக்களை மாண வர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய கவுசல் கிஷோர், தொடர்ந்து மோடி அரசு 2022க்குள் அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர் வளர்ச்சி செய் வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பிற மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங் களுக்கு சென்று வேலை செய்யும் தொழி லாளர்க ளுக்கு வீட்டுவசதி துறை சார்பாக குடிநீர் வசதி மின்சார வசதியுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்து தர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது,

மத்திய அரசால் மாநிலங்களுக்குக் கொடுக் கப்படும் வீட்டுவசதி மேம்பாட்டு நிதி போது மான அளவிற்கு வழங்கப் பட்டு வருகிறது ஸ்மார்ட் சிட்டிக்கு மத்திய மாநில அரசு நிதியின் கீழ் திட் டங்கள் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவ தாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய உஷு விளையாட்டு சங்க சிஇஓ சாகுல் அகமத் மற்றும் தமிழ்நாடு சங்கத் தலைவர் ஜான்சன், கே.பி.ஆர். கல்லூரி நிறுவனர் கே.பி.ராமசாமி, கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் தற்காப்பு கலை நடுவர்கள் 200க்கும் மேற் பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img