fbpx
Homeபிற செய்திகள்பாரா கிரிக்கெட் போட்டி

பாரா கிரிக்கெட் போட்டி

தேசிய விளையாட்டு தினத்தை (ஆக. 29) முன்னிட்டு, இந்திய பாரா அமர்வு கிரிக்கெட் சங்கம் நடத்திய, மாநில அளவிலான பாரா அமர்வு கிரிக்கெட் போட்டி, சென்னை புலிகள் மற்றும் தஞ்சை ஜாஸ்கிங்ஸ் அணிகளுக்கு இடையே வெங்கத்தூர் (கிராமம்), திருவள்ளூர் மாவட் டத்தில் நடை பெற்றது.

இந்த தொடரில் 2-1, என்ற கணக்கில் தஞ்சை அணி வெற்றி பெற்றது. சிறந்த மட்டை வீரராக முகம்மது கதாபி தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக கே.விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் சசிகுமார், தலைமையாசிரியர் பன்னீர்செல்வம், பேராசிரியர் ராஜசிம் மன்,பேராசிரியை ஜெயப்பிரியா, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ராம், பகுஜன் சமாஜ் கட்சி ஜானி, பத்திரிகையாளர் முத்துக்குமரன், அடைக்கலம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியா பாரா அமர்வு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் முகம்மது கதாபி, மணிகண்டன், மருத்துவர் கிரிதரன், தேவகாந்தன், முனீஸ்வரன் உள்ளிட்டோர் இதை வழிநடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img